IPL 2024: ”எல்லாம் மாறும்” புது கேப்டனுக்காக வீடியோ வெளியிட்ட CSK

Published On:

| By Manjula

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று (மார்ச் 22) தங்களுடைய புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாடிற்காக ‘WhistlePodu Anthem’ வீடியோ வெளியிட்டுள்ளது.

சென்னை அணியின் நீண்டகால கேப்டன் என்ற பெருமையை தக்க வைத்திருந்த தோனி நேற்று (மார்ச் 21) தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அந்த அணியின் புது கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?

இதை தோனி ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து தோனி குறித்த தங்களின் நினைவலைகளை பகிர்ந்து, சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை அணி ருத்துராஜினை மையமாக வைத்து புதிய ‘ஆந்தம்’ வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் தோனிக்கு பதிலாக ருத்துராஜை ‘ஹைலைட்’ செய்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் பாட… டைகர் ஷெராஃப் ஆட… : தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா!

புதிய கேப்டன் என்பதால் இதை தவிர்க்க முடியாது என்றாலும் அந்த வீடியோவின் கீழும், தோனியின் பழைய வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை அணியை பொறுத்தவரை சேப்பாக்கம் சொந்த இடம் என்பதால் களத்தின் சாதக, பாதகங்கள் குறித்து நன்கு தெரிந்திருக்கும். ஆனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், பெங்களூரு அணி பெயரை எல்லாம் மாற்றி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

மறுபுறம் தோனி கேப்டனாக இல்லாமல் சேப்பாக்கத்தில் இன்று பெங்களூரு அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் கட்டாயம் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும். எனவே முதல் போட்டியை வென்று ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ருத்துராஜ் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி

பொன்முடிக்கு உயர்கல்வி… ராஜகண்ணப்பனுக்கு கதர், கிராம தொழில் ஒதுக்கீடு!

கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share