சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக தற்போது ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடர் தற்போது 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பல்வேறு சாதனைகளை ஒவ்வொரு அணியும் படைத்து வருகிறது.
கடந்த ஆண்டினை ஒப்பிடும்போது, ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
அதோடு இந்த ஆண்டு மட்டும் 6 அணிகளின் கேப்டன்கள் மாறி இருக்கின்றனர். அந்தவகையில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அவரின் தலைமையில் சென்னை அணி பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் ருதுராஜின் சொத்துமதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி அவரின் சொத்துமதிப்பு ரூபாய் 36 கோடியாக உள்ளது.
Thalaivar171: படத்தின் கதை இதுதான்?
கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்ளூர் விளையாட்டுகள் மட்டுமின்றி, பிசிசிஐ-க்கும் ஆடி வருகிறார்.
ஐபிஎல் தொடருக்காக வருடத்திற்கு ரூபாய் 6 கோடி சம்பளம் பெறுகிறார். அதோடு பல்வேறு விளம்பரங்கள் வாயிலாகவும் அவர் வருமானம் ஈட்டி வருகிறார்.
இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில், கோப்பையை வெல்லும் அணிக்கு பிசிசிஐ வழங்கும் பரிசுத்தொகையானது பிரித்து அளிக்கப்படும்.
தற்போது மிகவும் பிரபலமான சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருப்பதால், வரும் நாட்களில் அவரின் வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!
விதி மீறியதா ராஜஸ்தான்? ரிக்கி பாண்டிங் கோபத்தில் கத்தியது ஏன்? : விளக்கம்!
பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு!