IPL 2024: இரண்டாக ‘பிரிந்த’ அணிகள்… எந்த ‘குரூப்ல’ யாரு இருக்காங்கன்னு பாருங்க!

விளையாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22 அன்று துவங்கி வண்ணமயமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அதை கருத்தில் கொண்டு, முதற்கட்ட அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

மார்ச் 22 துவங்கி ஏப்ரல் 7 வரையிலான ஐபிஎல் தொடரின் முதற்கட்ட அட்டவணையில், 21 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, ஏப்ரல் 19 துவங்கும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியாகவுள்ளன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையையும் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த தொடருக்கான குரூப் விவரத்தை ஐபிஎல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் ‘குரூப் பி’-யில் இடம்பெற்றுள்ளன.

MI vs GT: கேப்டன்ஷிப்னா இப்படி இருக்கணும்… கில்லின் தலைமையில் ‘மும்பையை’ வீழ்த்தியது குஜராத்

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றுள்ளன.

குரூப் A

மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்

குரூப் B

சென்னை சூப்பர் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பஞ்சாப் கிங்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்

இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில், தனது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் ஒரு முறையும், மற்ற பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் 2 போட்டிகளும் ஒவ்வொரு அணியும் விளையாடும்.

இதன் அடிப்படையில், குரூப் பி பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி, குரூப் ஏ பிரிவில் உள்ள மும்பை அணியுடன் 2 முறை மோதவுள்ளது.

சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங்… அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என அழைக்கப்படும் சென்னை vs மும்பை ஆட்டம், இந்த ஆண்டு லீக் சுற்றிலேயே 2 முறை நடைபெறவுள்ளது, ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால் விரைவில் 2024 ஐபிஎல் தொடருக்கான, முழு அட்டவணையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தேர்தல் காரணமாக 2024 ஐபிஎல் தொடரை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஆனால் அதை பிசிசிஐ-யின் தலைவர் ஜெய் ஷா திட்டவட்டமாக மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மகிழ் 

சிவகங்கை தொகுதியில நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமா? – அப்டேட் குமாரு

தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி

மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *