CSK vs RCB: அதிரடி காட்டிய ஆர்சிபி… முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 174 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று (மார்ச் 22) இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் இடையிலான முதல் ஐபிஎல் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணிக்கு விராட் கோலி, பிளசிஸ் இருவரும் ஓபனிங் வீரர்களாக இறங்கினர்.

துவக்கம் முதலே அதிரடி காட்டிய பிளசிஸ் 35 ரன்களில் முஸ்தாபிசுர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை நன்றாக ஆடிய ஆர்சிபி தொடர்ந்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தங்களது பழைய பார்முக்கு திரும்பினர்.

விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழக்க ரஜத் படிதார், மேக்ஸ்வெல் இருவரும் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

18 ரன்களில் கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆர்சிபி அணி 78ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

என்றாலும் அடுத்து இறங்கிய அனுஜ் ராவத் (48), தினேஷ் கார்த்திக் (38) இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதையடுத்து பெங்களூரு அணி 2௦ ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்களை எடுத்தது.

சென்னை அணியை பொறுத்தவரை முஸ்தாபிசுர் இன்றைய ஆட்டத்தில் ஆபத்பாந்தவனாக மாறி அணியை காப்பாற்றினார்.

நான்கு ஓவர்கள் வீசிய அவர் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் 1 விக்கெட் எடுத்து ஆறுதல் அளித்தார். ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை.

ஆனால் தேஷ்பாண்டே (47), மதீஷா (37) இருவரும் வள்ளல் பரம்பரையாக மாறி ரன்களை வாரிவாரி வழங்கினர்.

இவர்கள் வீசிய பந்துகளை பெங்களூரு வீரர்கள் அடித்து நொறுக்கி ரன்களை குவித்தனர். இதனால் அடுத்த போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்தநிலையில் சென்னை அணியின் ஓபனிங் வீரர்களாக கேப்டன் ருத்துராஜ், ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர்.

இருவருமே தங்களது முதல் பந்தினை பவுண்டரியுடன் தொடங்கினர். ருத்துராஜ் 15 ரன்களில் இருந்தபோது  யஷ் தயாள் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஒன் டவுனாக ரஹானே இறங்கி ஆடி வருகிறார். பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணியின் ஸ்கோர் 62 ரன்களாக உள்ளது.

ரஹானே 14 ரன்களுடனும், ரச்சின் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ருத்துராஜ் தலைமையில் சென்னை அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்யுமா? காத்திருப்போம்!

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசாங்கத்தை மாற்றிய பாமக: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு வந்த அழுத்தம்… சௌமியா களமிறங்கிய பின்னணி!

“மோடி கண்ணில் தோல்வி பயம்” : திருச்சி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *