நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாமென, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் மாதத்தின் நடுவில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படலாம் என முன்னதாக கூறப்பட்டது.
ஆனால் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவிலேயே தொடரினை நடத்திட திட்டமிட்டு வருவதாகவும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதனால் தான் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் மாற்றப்படலாமென, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”பேட் கம்மின்சை ஹைதராபாத் அணி வாங்கியது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். அவருக்கான விலை அதிகம் என்றாலும் அது ஒரு நல்ல முடிவு தான்.
கம்மின்ஸ் நல்ல தலைமைத்துவம் வாய்ந்தவர். அவரின் கீழ் ஹைதராபாத் அணி நன்றாக விளையாடக்கூடும். கடந்த காலங்களில் அவர்களின் மோசமான பந்துவீச்சு காரணமாக முக்கியமான போட்டிகளில் முடிவுகள் மாறிப்போனதை பார்த்தோம்.
இந்தமுறை அந்த தவறுகள் நடக்காது என நிச்சயம் நம்பலாம். கண்டிப்பாக அவர்தான் இந்தமுறை ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் மும்பைக்கு வந்ததால் தற்போது குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!
நாளுக்குநாள் எகிறும் தங்கம் விலை… வரும் நாட்களில் மேலும் உயருமா?
Comments are closed.