Mayank Yadav: 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 3) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியபோது, லக்னோ அணிக்காக மிரட்டலாக பந்துவீசினார் மயங்க் யாதவ். இப்போட்டியில் ராஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் என 3 முக்கிய வீரர்களின் விக்கெட்களை அவர் கைப்பற்றினார்.
இப்போட்டியில், மொத்தம் 4 ஓவர்களை வீசிய மயங்க் யாதவ், வெறும் 14 ரன்களை மட்டுமே வழங்கி, 3 விக்கெட்களை கைப்பற்றி, லக்னோ அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகித்தார். இதன் காரணமாக, இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதையும் அவர் வென்றார்.
https://twitter.com/IPL/status/1775200103910813779
இதன்மூலம், ஐபிஎல் தொடரில் தனது முதல் 2 போட்டிகளிலுமே ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்று மயங்க் யாதவ் அசத்தியுள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங்க், அப்போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இப்போட்டியில் மேலும் ஒரு சாதனையையும் மயங்க் யாதவ் படைத்துள்ளார்.
அறிமுக போட்டியிலேயே, சாதாரணமாக தொடர்ந்து 150 கி.மீ வேகத்திற்கு மேல் பந்துவீசி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 156.7 கி.மீ வேகத்தில் ஒரு பந்தை வீசிய மயங்க் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் அதிவேக பந்தை வீசிய வீரர் என்ற தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிராக 155.8 கி.மீ வேகத்தில் மயங்க் யாதவ் பந்துவீசியிருந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய வீரர்கள் பட்டியல்
1) மயங்க் யாதவ் – 156.7 கி.மீ
2) நன்ரே பர்கர் – 153.0 கி.மீ
3) ஜெரால்டு கோட்ஸி – 152.3 கி.மீ
4) அல்சாரி ஜோசப் – 151.2 கி.மீ
5) மதீசா பதிரானா – 150.9 கி.மீ
இதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய வீரர்கள் பட்டியலிலும், மயங்க் யாதவ் டாப் 5 இடங்களுக்கும் நுழைந்துள்ளார்.
1) ஷான் டைட் – 157.71 கி.மீ
2) லாக்கி பெர்குசன் – 157.3 கி.மீ
3) உம்ரான் மாலிக் – 157 கி.மீ
4) மயங்க் யாதவ் – 156.7 கி.மீ
5) அன்ரிச் நோர்க்யா – 156.22 கி.மீ
https://twitter.com/IPL/status/1775230896116752681/
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐ.நா பணியாளர்கள் 7 பேர் மரணம்: இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!
தைவானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன… மூன்று நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
RCB vs LSG: சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்திக்கும் பெங்களூரு
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!