ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொரில் நேற்று (மே 5) இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய 48 வது லீக் போட்டியில் ராஜ்ஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஹர்தீக் பாண்ட்யா வேகத்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த முறை சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருந்த ஜெய்ஸ்வால் சஞ்சு சாம்சனால் 14 ரன்களில் ரன் அவுட்டானார்.
அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்ததால் சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடத் தொடங்கினார். ஆனால் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில், குறிப்பாக ஒற்றை இலக்க ரன்களில் பலர் ஆட்டமிழந்தனர்.
இதனால் ராஜஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது குஜராத் அணி. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே அதிரடியாக அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டனர்.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹா 41 ரன்கள் மற்றும் கேப்டன் ஹர்தீக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் 13.5 ஓவரிலேயே குஜராத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் 37 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்ட குஜராத் ஐபிஎல் தொரில் பந்துகள் அடிப்படையில் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் மோசமாக தோற்ற ராஜஸ்தான் 10 போட்டிகளில் 5 வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் பட்லர் அவுட்டாகிய நிலையில் ஜெய்ஸ்வாலை பவர் ப்ளே ஓவரில் சஞ்சு சாம்சனால் ரன் அவுட்டாக்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடர்ந்து இன்று நடைபெறும் 49 வது லீக் போட்டியில் சென்னை – மும்பை மற்றும் 50 வது லீக் போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
மோனிஷா
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி