ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசனில் இன்று (ஏப்ரல் 17) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 24 வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
எனினும், அடுத்தடுத்த ஆட்டங்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான். இப்படி 2 வெற்றி 2 தோல்வியுடன் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொருத்தவரை சிஎஸ்கேவைப் போலவே இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும் 2இல் தோல்வியையும் தழுவியுள்ளது.
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி.
பின்னர், கொல்கத்தாவுடன் படுதோல்வியைச் சந்தித்தது. அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதி மீண்டும் தோல்வியைச் சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
பின்னர், டெல்லி அணியுடன் மோதிய பெங்களூரு அணி , அந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கேவில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே என பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
இதேபோல், பெங்களூர் அணியிலும் டூ பிளஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸில் மொயின் அலி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
குறிப்பாக முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து அசத்தி வருகின்றனர்.
ஆர்சிபி அணியிலும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் நல்ல பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
முந்தைய ஆட்டங்களில் செய்த சில தவறுகளை இரு அணிகளும் சரிசெய்து கொண்டு இந்த ஆட்டத்தில் மோதும். இதனால், இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உத்தேச ஆடும் 11 வீரர்கள்
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் ), சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர்
பெங்களூரு உத்தேச ஆடும் 11 வீரர்கள்
விராட் கோலி, டூ பிளஸிஸ்(கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்,மஹிபால் லோமரோர், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பைனாப்பிள் கேசரி
சஞ்சு சாம்சன் – ஹெட்மேயர் அதிரடி: குஜராத்தை பறக்கவிட்ட ராஜஸ்தான்