ஐபிஎல் 2023: சென்னை அணியில் இருப்பவர்கள் யார்? செல்பவர்கள் யார்?

விளையாட்டு

ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெறவுள்ளதால் பல்வேறு வீரர்களை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக டிசம்பர் 23ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெற உள்ளது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் எதிர்பார்க்கப்படாத பல முக்கிய மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் ஷிவம் துபே, அமபத்தி ராயுடு, மகேஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சோலன்கி உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் இருந்து டிவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோடர்ன், ஜெகதீஷன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஆசிப் ஆகிய 8 வீரர்களை வைத்துக் கொள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை. எனவே அவர்கள் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுவிக்கப்பட்ட வீரர்களை கௌரவமாக வழியனுப்பும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

மோனிஷா

டிஜிட்டல் திண்ணை: பாஜக கூட்டணி – தொண்டர்களிடம் பல்ஸ் பார்க்கும்  எடப்பாடி

சானியா மிர்சாவை வாழ்த்திய சோயிப் மாலிக்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *