ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சறுக்கிய சிஎஸ்கே!

விளையாட்டு

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

16வது ஐபிஎல் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) இரவு கோலாகலமாகத் தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணி வலுவான பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்வாட் அரைசதம் அடித்து தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

கெய்க்வாட்டை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சுமாரான ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஆட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார்.

20 ஓவர் இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார்.

தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 63 ரன்களை எடுத்திருந்தார்.

அதிகப்படியான விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி வந்த குஜராத் அணி 19.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 2வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு மேகாலயாவில் தொடங்கும் முதல் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதவுள்ளன.

மோனிஷா

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: சென்னையில் எந்தெந்த இடங்கள்?

கிச்சன் கீர்த்தனா: ஆலு கோபி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.