சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக, லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இந்திய அணி சாதித்திருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு, மீடியாக்களிடம் பேசிய இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர், “பாகிஸ்தான் அணியால் இந்தியாவின் பி அணியை கூட வீழ்த்த முடியாது. தற்போதுள்ள இந்திய பி அணியை வீழ்த்தி காட்டுவது கூட பாகிஸ்தானுக்கு கடினமான காரியமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.Inzamam Attacks Sunil Gavaskar

தற்போது, கவாஸ்கரின் பேச்சுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஷமாம் உல் ஹக் 24 நியூஸ் ஊடகத்தின் வழியாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், “பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட பயந்து ஒரு முறை வேண்டுமென்றே ஷார்ஜா போவதாக கூறி விட்டு சென்றவர்தான் இந்த கவாஸ்கர். அப்போது, அவர் சீனியர். நாங்கள் இளைஞர்கள். எங்களுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை இருந்தது.
இந்திய அணி நன்றாக விளையாடியது . வெற்றி பெற்றது. அதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், ஒரு அணியை விமர்சிக்கும் போது, வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். உங்கள் அணியை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த வார்த்தைகளை கொண்டு பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், எதிர் அணியை விமர்சிக்கும் போது, தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மோசமான டேஸ்ட் ஆகும். Inzamam Attacks Sunil Gavaskar
இது போன்று பேசுவதால் , கவாஸ்கர் தன் மீதுள்ள மரியாதையை கெடுத்துக் கொள்கிறார். கவாஸ்கர் தனது நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிய ஆட்டங்களில் பாகிஸ்தான் 73 முறை வென்றுள்ளது. இந்தியா 58 முறைதான் வெற்றி பெற்றுள்ளது” என்று இன்ஷமாம் தெரிவித்துள்ளார்.