சர்வதேச மல்யுத்த போட்டி: பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?

Published On:

| By Jegadeesh

சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று (செப்டம்பர் 10 ) செர்பியா நாட்டின் பெல்கிரேட்டில் தொடங்க உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து சுமார் 800 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் போட்டியாக இன்று கிரேக்கோ ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 13ஆம் தேதி முதல் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தியா சார்பில் பஜ்ரங் புனியா, ரவி தஹியா, வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் இடம்பெற உள்ளனர்.

கிரேக்கோ ரோமன் பிரிவு இந்திய அணி:

அர்ஜூன் ஹலகுர்கி(55 கிலோ எடைப்பிரிவு), ஞானேந்தர்(60 கிலோ எடைப்பிரிவு), நீரஜ் (63 கிலோ எடைப்பிரிவு), அஷூ(67 கிலோ எடைப்பிரிவு), விகாஸ்(72 கிலோ எடைப்பிரிவு), சச்சின்(77 கிலோ எடைப்பிரிவு), ஹர்ப்ரீத் சிங் (82 கிலோ எடைப்பிரிவு), சுனில் குமார் (87 கிலோ எடைப்பிரிவு), தீபான்ஷீ(97 கிலோ எடைப்பிரிவு) சதீஷ் (130 கிலோ எடைப்பிரிவு)

ஃப்ரீஸ்டைல் இந்திய ஆடவர் அணி:

பஜ்ரங் புனியா(65 கிலோ எடைப்பிரிவு), ரவி தஹியா(57 கிலோ எடைப்பிரிவு), பங்கஜ் மாலிக்(61 கிலோ எடைப்பிரிவு),நவீன் மாலிக்(70 கிலோ எடைப்பிரிவு), சாகர் ஜக்லான்(74 கிலோ எடைப்பிரிவு), தீபக் மிர்கா (79 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா(86 கிலோ எடைப்பிரிவு), விக்கி ஹூடா(92 கிலோ எடைப்பிரிவு), விக்கி சாஹர் (97கிலோ எடைப்பிரிவு), தினேஷ் தன்கர்(125 கிலோ எடைப்பிரிவு)

ஃப்ரீஸ்டைல் மகளிர் அணி:

வினேஷ் போகட்(53 கிலோ எடைப்பிரிவு), சுஷ்மா சோகீன்(55 கிலோ எடைப்பிரிவு), சரிதா மோர்(57 கிலோ எடைப்பிரிவு), மான்சி அஹல்வாட்(59 கிலோ எடைப்பிரிவு), சோனம் மாலிக்(62 கிலோ எடைப்பிரிவு), ஷெஃபாலி (65 கிலோ எடைப்பிரிவு), நிஷா தஹியா(68 கிலோ எடைப்பிரிவு), ரித்திகா(72 கிலோ எடைப்பிரிவு), பிரியங்கா(76 கிலோ எடைப்பிரிவு)

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த போட்டியில் இந்திய அணி ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமான பதக்கங்களை இந்திய அணி வீரர்கள் பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share