இண்டர் மியாமிக்கு முதல் கோப்பை… மெஸ்ஸியை கொண்டாடும் அமெரிக்கா!

Published On:

| By christopher

inter miami won the first ever trophy with Lionel messi

அமெரிக்காவில் நடைபெற்று வந்த  லீக் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவில் நடப்பு ஆண்டிற்கான லீக்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புகிடையே இன்று (ஆகஸ்ட் 20) காலை நடைபெற்றது.

இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி இறுதிப்போட்டியில் இருந்தது தான்.

இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத சோக வரலாறைக் கொண்ட அந்த அணியும், நாஷ்வில்லி அணியும் இறுதிப்போட்டியில் மோதின.

முதல் பாதியின் 23 வது நிமிடத்தில் மெஸ்ஸி 4 நாஷ்வில்லி வீரர்கள் சூழ்ந்த போதும் அற்புதமான கோல் அடிக்க முன்னிலை பெற்றது இன்டர் மியாமி அணி.

இது இந்த தொடரில் மெஸ்ஸி அடித்த 10வது கோல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் நாஷ்வில்லி அணியின் ஃபாஃபா 57 வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.

பின்னர் கூடுதல் நேரம் உட்பட ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க ஆக்ரோசமாக முயற்சித்த நிலையிலும் மேற்கொண்டு ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்டில் முதல் சூட் அவுட்டில் 4-4 என்று சமனில் முடிந்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் சூட் அவுட்டிலும் இரு அணி வீரர்களும் சமமாக கோல் அடித்து வந்தனர்.

இறுதியில் நாஷ்வில் கோல் கீப்பர் எலியட் பானிக்கோவின் ஸ்பாட்-கிக்கை, டிரேக் காலண்டர் அசுரவேகத்தில் பாய்ந்து தடுக்க மியாமி அணி 10-9 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் அணி உருவாக்கப்பட்ட கடந்த 5 வருட காலத்தில் முதன்முறையாக கோப்பையை முத்தமிட்டுள்ளது இண்டர் மியாமி.

இதற்கு முழு காரணம் இந்தாண்டு அணியில் சேர்ந்த உலகின் அதி சிறந்த வீரரான மெஸ்ஸி தான். அவரது வரவு இண்டர் மியாமி அணி வீரர்களுக்கு புது உற்சாகத்தையும் தெம்பையும் அளித்துள்ளது.

மேலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட மெஸ்ஸி அதிகப்பட்ச கோல் (11) அடித்த வீரருக்கான விருதினை வென்றார். அதோடு தொடரின் சிறந்த வீரர் விருதையும் தட்டி சென்றுள்ளார்.

inter miami won the first ever trophy with Lionel messi

அர்ஜென்டினா, பார்சிலோனா, பி.எஸ்.ஜி மற்றும் தற்போது இண்டர் மியாமி  அணிக்காக கடந்த 20 ஆண்டுகாலமாக விளையாடி வரும் மெஸ்ஸி தனது 44வது  கோப்பையை கைப்பற்றியுள்ளார்.  இதன்மூலம் உலகளவில் அதிக கோப்பைகளை வென்றுள்ள வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து கால்பந்து உலகின் தனி கவனம் பெற பல ஆண்டுகளாக ஏங்கி வரும் அமெரிக்கா, தற்போது மெஸ்ஸியின் வரவால் அதனை பெற்றுள்ள நிலையில் சமூகவலைதளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

நீட் தேர்வுக்கு எதிராக திமுக: உண்ணா விரதமா? உண்ணும் விரதமா?

ஜவான் படத்தை ரூ.22 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel