இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று (நவம்பர் 7) வலை பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது கையில் காயம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதியாகி உள்ளது.
நவம்பர் 10-ஆம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவுடன் ரோகித் சர்மா தனது பேட்டை கீழே வீசினார். உடனடியாக அவரை இந்திய அணி மருத்துவர் கமலேஷ் ஜெயின் பரிசோதித்தனர். அவரை நாற்காலியில் அமரவைத்து பனிக்கட்டி கொண்டு அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால், பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்ற இந்திய அணி வீரர்கள் கலக்கத்தில் காணப்பட்டனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ரோகித் சர்மாவின் காயத்தை ஆய்வு செய்தார்.
பின்னர், 40 நிமிடங்களுக்கு பிறகு ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடர்ந்து அவர் 15 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ரோகித் சர்மா வலியை உணரவில்லை என்றார். இதனால் கலக்கத்தில் இருந்த இந்திய அணி வீரர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். காயத்திலிருந்து மீண்டதால், ரோகித் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் ஆடுவார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ஹாலிவுட் பட பாணியில் ரகசிய அறை: சோழர் கால சிலைகள் மீட்பு !
”சினிமா தொழிலாளர்களின் சம்பள பிடிப்பு தொகை எங்கே?” : ஆர்.கே.செல்வமணி