ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (ஜூலை 14) நடைபெற்ற கடைசி டி20 போட்டியிலும் வென்று 4-1 என்கிற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது.
முதல் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த ஜிம்பாவே அணி, அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என கணக்கில் ஏற்கெனவே இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் சஞ்சு சாம்ஸன் அரைசதமும்(58), ஷிவம் துபம் 26 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாவே அணியில் தொடக்க வீரரான வெஸ்லி முதல் ஓவரிலேயே முகேஷ் குமார் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் ஜிம்பாவே வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 18.3 ஒவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக டியோன் மயர்ஸ் 34 ரன்களும், டடிவனாஸே மற்றும் ஃபராஸ் அக்ரம் 27 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்கிற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபேவும், தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தரும் பெற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும்” : சித்தராமையா