INDvsSA India won the last match
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று (டிசம்பர் 14) நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் சமன் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது.
முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று இரவு நடைபெற்றது.
டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
கடந்த போட்டி போலவே மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 56 பந்துகளில் சதம் கண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ், தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் (60) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 கடந்தது.
தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். 2வது ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் ரீஸ் பிரெட்டெஸ்கி 4 ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் ஏய்டன் மார்க்ரம்(25) மற்றும் மில்லர்(35) என்னதான் போராடினாலும், மற்ற வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய குல்தீப் யாதவ், 2.5 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி – 20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
டி20 தொடரை அடுத்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 17ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
INDvsSA India won the last match