இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி தற்போது, தென் ஆப்பிரிக்காவின் செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்று வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 டி20போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. இதனால் இரண்டு அணி வீரர்களும் சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டனர்.
முதல் போட்டி போல இரண்டாவது போட்டியும் மழையால் ரத்தாகுமா? இல்லை வானம் வழி விடுமா? என்ற ஒரு பயத்துடனேயே இரண்டு அணிகளும் மேகத்தை பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் இன்று (டிசம்பர் 12) மழை இல்லை. இதையடுத்து 2-வது டி20 போட்டியில் மோத இரண்டு அணிகளும் தற்போது செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் களமிறங்கி இருக்கின்றன.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் ஓபனர்களாக ஸுப்மன் கில், யாஜஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.
தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் குறைத்து எடை போடக்கூடாது என்று நாம் முன்னரே கூறியிருந்தோம்.
அது உண்மை என்று நிரூபிப்பது போல ஜெய்ஸ்வால் (0), கில் (0) இருவரும் டக் அவுட் ஆகி தங்களுடைய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே பறிகொடுத்து வெளியேறினர்.
நன்றாக ஆடிய திலக் வர்மாவும் 29 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். தற்போது களத்தில் சூர்யகுமார் (50), ரிங்கு சிங்(17) இருவரும் உள்ளனர். 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது.
RutuRaj Gaikwad is unavailable due to illness or they don't want to give him chance 🙂? #INDvsSA#RuturajGaikwad #Cricket #INDvSA #YuvrajSingh #HappyBirthdayYuvi#RishabhPant #iplauction2024#IPL2024Auction #AUSvPAK #HBDYuvrajSingh #INDvsSA#SAvIND pic.twitter.com/9p6p2I28pf
— vedvar mishra (@vedvar255) December 12, 2023
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் இன்றைய ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. தற்போது 3 விக்கெட்டுகளை இந்தியா விரைவாக இழந்ததை பார்த்த ரசிகர்கள், பேசாம அவரை எடுத்துருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
ஸுப்மன் கில், யாஜஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் விவரம்: