ICC world cup: பனிப்பொழிவை கருத்தில் கொண்டு பவுலிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டியாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார்.
மேலும் அவர், “இரண்டாவது இன்னிங்ஸில் பனி அதிகம் இருக்கும் என்பதால் அதை மனதில் வைத்து, நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம்.
மைதானத்தில் அருமையான சூழல் நிலவுகிறது. போட்டியை நிதானமாக வைத்திருப்பது இதுபோன்ற போட்டியில் மிக முக்கியமான விஷயம்.
இஷானுக்குப் பதிலாக கில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக கில் இந்திய அணியில் கில் சிறந்த வீரராக உள்ளார். அவர் முக்கியமான இந்த போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் தாங்களும் டாஸ் வென்று முதலில் பந்து வீச விரும்பியதாக கூறிய பாபர் அசாம், அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறினார்.
Goosebumps Guaranteed..
Indian National anthem at Narendra Modi Stadium 🇮🇳🔥#INDvsPAK #INDvPAK #CWC23 pic.twitter.com/nLLUj4KvRV— Ishan Joshi (@ishanjoshii) October 14, 2023
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்துவரும் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிராஜின் ஓவரை குறிவைத்து அதிரடியாக பேட்டை சுழற்றி வருகின்றனர்.
எனினும் 8வது ஓவரின் கடைசி பந்தில் ஷாபிக்கை (20) எல்.பி.டபிள்யூ செய்து வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளார் சிராஜ்.
https://twitter.com/balltamperrerrr/status/1713121599405294029
பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்களின் விவரம்:
இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், இப்திகர் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாசன் அலி, ஷாகின் அப்ரிடி, ஹரிஸ் ராஃவுப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“பெண்களுக்கு விழிப்புணர்வாக மகளிர் மாநாடு அமையும்” – கனிமொழி