இந்திய அணிக்கு எதிரான இன்றைய (அக்டோபர் 14) உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களுக்கு சுருண்டு ஆட்டம் கண்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 12வது லீக் ஆட்டம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவை இதுவரை ஒருமுறை கூட வெல்லாத பாகிஸ்தான் அணி வரலாற்றை மாற்றும் முடிவுடன் களமிறங்கியது.
டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியோ, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் (50) அரைசதம் அடித்த நிலையில், ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் தொடந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலினுக்கு நடையை கட்ட வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான்.
இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
தனது ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய சுப்மன் கில் 4 பவுண்டரிகளை விரட்டி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஹாகின் அப்ரிடி ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 38 ரன்கள் குவித்துள்ள இந்திய அணியில் ரோகித் (16*), விராட்கோலி (5*) ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: சிபிசிஐடி வழக்குப்பதிவு!
அனைத்து மகளிருக்கும் ரூ.1000 : பாஜக ஆர்ப்பாட்டம்!
SK21 டைட்டில் ரிலீஸ் அப்டேட்… ரசிகர்கள் குஷி!