இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. IndVsNz Shami 7 wickets
இந்திய அணியுடன் இறுதி போட்டியில் மோதப்போவது தென் ஆப்பிரிக்காவா? இல்லை ஆஸ்திரேலியாவா? என்பது இன்று(நவம்பர் 16) தெரிந்து விடும்.
எனினும் 10/10 என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் ’இந்த முறை கப்பு நமக்குத்தான்’ என ரசிகர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ’செமி பைனல் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி 7 விக்கெட் எடுப்பது போல கனவு கண்டேன்’ என, ரசிகர் ஒருவர் போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Saw a dream where Shami took 7 wickets in the semi final ☠️
— Don Mateo (@DonMateo_X14) November 14, 2023
எக்ஸ் தளத்தில் டான் மேட்டோ என்னும் பெயரில் உள்ள அந்த ரசிகர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) மதியம் 1.14 மணிக்கு, ”ஷமி செமி பைனலில் 7 விக்கெட்டுகள் எடுப்பது போல கனவு கண்டேன்”, என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் அதேபோல ஷமி 7 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
இதனையடுத்து டான் மேட்டோவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது. அதோடு இன்று(நவம்பர் 16) நடைபெறும் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”இன்று எந்த கனவும் நான் காணவில்லை என்றாலும் டாஸ் வெல்லும் அணி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
Didn't dream anything today btw but general feeling says team winning the toss will win the game. Rain around will throw more permutations into the mix!
— Don Mateo (@DonMateo_X14) November 16, 2023
ஷமிக்கு நடந்தது போன்று இன்றும் மேட்டோவின் உள்ளுணர்வு சொன்னது உண்மையாகுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் அவரின் பதிவுகளின் கீழ் ரசிகர்கள் அப்படியே ’பைனல்ல இந்தியா கூட யாரு மோதப்போறான்னு? சொல்லிடுங்க’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். IndVsNz Shami 7 wickets
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
WorldCup 2023: 48 வருஷத்துல இதான் பர்ஸ்ட்… கோலி, ரோஹித், ஷமி உடைச்ச ரெக்கார்டுகளை பாருங்க!
பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது!