ODI World Cup 2023: 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி அணியில் இணைந்தனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் தேவன் கான்வே மற்றும் வில் யங் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டெரில் மிட்சல், நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ரச்சின் ரவீந்திரா 75 (87) ரன்களுக்கும், டெரில் மிட்சல் 130 (127) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
இதனால், 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து 273 ரன்களை மட்டுமே சேர்த்தது. முகமது ஷமி 5 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார்.
274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியான துவக்கம் அளித்தனர். ரோகித் சர்மா 46 ரன்களுக்கும், சுப்மன் கில் 31 ரன்களுக்கு வெளியேற, அடுத்து களமிறங்கிய விராட் கோலி (95 ரன்கள்), சீரான வேகத்தில் இந்தியாவுக்கு ரன்களை சேர்த்தார்.
அவருக்கு ஜோடியாக, ஷ்ரேயஸ் அய்யர் (33 ரன்கள்), கே.எல்.ராகுல் (27 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (39* ரன்கள்) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 48வது ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
தனது மிரட்டலான பந்துவீச்சால், 5 விக்கெட்களை கைப்பற்றிய முகமது ஷமி ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
மேலும், இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 354 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 311 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இந்த தொடரில், அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில், 11 விக்கெட்களுடன் பும்ரா 3வது இடத்தில் உள்ளார். 12 விக்கெட்களுடன், நியூசிலாந்தின் மிட்சல் சான்ட்னர் முதலிடத்தில் உள்ளார்.
முரளி
அலர்ட் மெசேஜ் வரலைன்னா ஆன்ட்டி இந்தியனா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அதிமுக பற்றி அண்ணாமலை சைலன்ட்- அடித்து ஆடும் ஸ்டாலின்! தடுத்து ஆடும் எடப்பாடி