sarfaraz khan test debut

”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!

ரசிகர்கள் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோடு சேர்த்து, பிசிசிஐ-யும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் டெஸ்டில் 28 ரன்களில் வெற்றிவாய்ப்பை இந்திய அணி இழந்தது.

sarfaraz khan test debut

இதனால் இரண்டாவது டெஸ்டில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அணிக்குள் வந்த இளம்வீரர் சர்பராஸ் கானுக்கு 2-வது டெஸ்டில் இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் இன்று(பிப்ரவரி 2) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் நன்றாக ஆடக்கூடிய சர்பராசை ராகுல் டிராவிட், ரோஹித் இருவரும் பெஞ்சில் அமர வைத்துள்ளனர்.

https://twitter.com/asghar_muh88722/status/1753258062570242303

இதைப்பார்த்த ரசிகர்கள், ”சர்பராஸ் கானுக்காக நான் வருந்துகிறேன்”, ”ஏன் அவர் அணியில் இல்லை. காரணம் கூறுங்கள்”, ”இது நியாயமற்றது”, ”29 ரன்கள் ஆவரேஜ் வைத்திருக்கும் கில்லுக்கு இடமுள்ளது 7௦ ரன்கள் ஆவரேஜ் வைத்திருக்கும் கானுக்கு இடமில்லை” என ராகுல் டிராவிட், ரோஹித் மற்றும் பிசிசிஐ வறுத்தெடுத்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் வழக்கம்போல கில் 34 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். ரஜத் படிதார் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் 35 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனநாயக சக்திகளை மிரட்டுவதுதான் பாஜகவின் சாதனை : ஸ்பெய்னில் இருந்து ஸ்டாலின் மடல்!

மேகதாது வாக்கெடுப்பில் தமிழக அதிகாரிகள் கலந்துகொண்டது ஏன்? : எடப்பாடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts