தர்மசாலாவில் இன்று (மார்ச் 7) தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் மற்றும் அஸ்வின் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
ஏற்கெனவே நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் க்ராலி சிறப்பான தொடக்கத்தை அளித்த நிலையில் அடுத்தடுத்து 3 மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார் குல்தீப் யாதவ்.
அவருடன் இன்று தனது 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைய இந்திய அணியின் சுழலில் சிதறியது இங்கிலாந்து அணி.
குறிப்பாக 50வது ஓவரை வீசிய அஸ்வின் அந்த ஒரே ஓவரில் டாம் ஹார்ட்லி(6) மற்றும் மார்க் வுட்(0) இருவரையும் வெளியேற்றினார்.
I. C. Y. M. I!
1⃣ Over
2⃣ Wickets
2⃣ Brilliant Catches
R Ashwin 🤝 Devdutt Padikkal 🤝 Rohit Sharma
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @devdpd07 | @ImRo45 | @IDFCFIRSTBank pic.twitter.com/TDfvYLRDEo
— BCCI (@BCCI) March 7, 2024
அதே போன்று 58வது ஓவரில் போக்ஸ்(24) மற்றும் ஆண்டர்சன்(0) ஆகியோரை அவுட் செய்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸையும் முடித்து வைத்தார் அஸ்வின்.
இதற்கிடையே குல்தீப் யாதவ் டெஸ்ட் இன்னிங்ஸில் 4வது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தார்.
மேலும் மிக குறைந்த பந்துகளில்(1871) டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் குல்தீப் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த படியாக அக்சர் பட்டேல் (2205) உள்ளார்.
இந்தியாவின் சுழலில் சிக்குண்ட இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட் மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணியின்முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்”: மதிமுக தீர்மானம்!
புதுச்சேரி சிறுமி வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ மாற்றம்!