INDvsAUSFinal: சாதனை படைத்த கையுடன் ஆட்டமிழந்த கோலி

விளையாட்டு

IND vs AUS: ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்று சாதனை படைத்த விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்துவரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங் செய்து வருகிறது இந்தியா.

ஆரம்பத்திலேயே சுப்மன் கில்(4), ரோகித் சர்மா(47) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணிக்கு கோலியுடன் 4வது விக்கெட்டுக்கு இணைந்தார் கே.எல்.ராகுல்.

இருவரும் நிதானமாக பவுண்டரி, சிக்சருக்கு பந்தை விரட்டாமல் சிங்கிள் எடுத்து விளையாடி வந்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடி வந்த கோலி நடப்பு தொடரில் 6வது அரைசதத்தை பதிவு செய்தார். இதில் 30 ரன்கள் சிங்கிள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். மேலும் 2015 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 50+ ஸ்கோர் பதிவு  செய்த ஸ்டீவ் ஸ்மித் சாதனையையும் சமன் செய்தார்.

இந்த நிலையில் 29வது ஓவரை வீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுன்சரை தட்டி விட முயற்சித்த நிலையில், பந்து ஸ்டம்பை சிதறடிக்க 54 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார் விராட் கோலி.

அணியை காப்பாற்றும் முயற்சியில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வந்த நிலையில், தற்போது கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsAusFinal: மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்… பதற்றமடைந்த கோலி

கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0