ICC Worldcup Final: அதிரடியாக சதம் கண்ட டிராவிஸ் ஹெட்… தோல்வியின் பிடியில் இந்தியா!

ஆஸ்திரேலியா அணி 33 ஓவர்களில் 185 ரன்களை குவித்துள்ள நிலையில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியாகியுள்ளது.

அகமதாபாத்தில் நடந்துவரும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர்(7), மிட்செல் மார்ஸ்(15) மற்றும் ஸ்மித்(4) ஆகியோரை  பவர் பிளேயில் பெவிலியனுக்கு விரட்டி இந்திய பவுலர்கள் ஷமி, பும்ரா மிரட்டினர்.

47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார் லபுசனே.

இருவரும் சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன், அணியின் ரன் வேகத்தையும் குறையாமல் பார்த்து கொண்டனர்.

தொடர்ந்து குல்தீப், சிராஜ், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், கடைசி கட்டத்தில் வீச வேண்டிய ஷமி மற்றும் பும்ராவை 25 -30 ஓவரை வீச வைத்தார் கேப்டன் ரோகித்.

ஆனால் அவர்கள் போட்டும் விக்கெட் எடுக்க முடியாத நிலையில், சதம் கண்ட ஹெட்(100*) மற்றும் லபுசனே(41*) இருவரின் பார்னர்சிப் 120 ரன்களை தாண்டியுள்ளது.

தற்போது 33 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எட்டி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சத்தம் கேட்குதா? : ஆஸ்திரேலியாவை மிரட்டும் ஷமி, பும்ரா… அலறவிடும் ரசிகர்கள்!

சர்ச்சைப் பேச்சு: நடிகர் சங்கத்தில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்?

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts