அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.
1983, 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல முயற்சித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று தோல்வியை தழுவியுள்ளது.
எனினும் இறுதிப்போட்டிக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது, ”போட்டியின் முடிவு நம் வழியில் செல்லவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம். ஆனால் இன்று இந்திய அணி நன்றாக விளையாடவில்லை.
போதுமான ஸ்கோரை நாங்கள் போர்டில் வைக்கவில்லை. இன்னும் 20-30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கே.எல்.ராகுல் மற்றும் கோஹ்லி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பைத் தந்தனர், நாங்கள் 270-280 என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம்.
240 ரன்கள் எடுத்திருந்ததால், நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க விரும்பினோம். ஆனால் பவர்பிளேக்கு பிறகு விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய ஹெட் மற்றும் லபுசனே ஆகியோரை பாராட்ட வேண்டும்.
இரண்டாவது இன்னிங்ஸில் விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்திருந்தால் வெற்றி எங்கள் பக்கம் இருந்திருக்கும். ஆனால் அதை சாக்காக சொல்ல விரும்பவில்லை” என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியா சாம்பியன்: மோடி, ராகுல், ஸ்டாலின் வாழ்த்து!
INDvsAUS Final: சொன்னதை செய்த கம்மின்ஸ்… 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!