சச்சினுக்குப் பிறகு வரலாற்றில் இரண்டாவது வீரராக ஆஸ்திரேலியாவை 100வது முறையாக இன்று (டிசம்பர் 14) எதிர்கொள்கிறார் இந்திய அணி வீரர் விராட் கோலி.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இரு அணிகளும் இன்று பிரிஸ்பேனில் உள்ள பழமைவாய்ந்த கபா மைதானத்தில் களமிறங்கியுள்ளன.
இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100வது சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற பெருமையை விராட்கோலி உள்ளார்.
முதலிடத்தில் 110 போட்டிகளில் விளையாடி இந்திய ஜாம்பவான் சச்சின் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய டாப் 5 வீரர்கள் :
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 110
விராட் கோலி (இந்தியா) – 100*
டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) – 97
எம்எஸ் தோனி (இந்தியா) – 91
சர் விவ் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) – 88
விராட் கோலி சாதனைக்கு ஒரு சதம் தேவை!
கபாவில் இன்று தொடங்கியுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்தால், சுனில் கவாஸ்கருக்குப் பிறகு பெரிய ஐந்து ஆஸ்திரேலிய மைதானங்களிலும் ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
கவாஸ்கர் மற்றும் இங்கிலாந்தின் அலஸ்டர் குக் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வெளிநாட்டவர் ஆவார்.

இன்று காலை தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கு பெரும் அச்சுறுத்தலாக இடைஇடையே மழை பெய்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி இதுவரை விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
இந்திய அணி ப்ளேயிங் லெவன்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருவண்ணாமலை தீப விழா : பக்தர்கள் கூட்டம் குறைவு – ஏன்?
டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!