சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு… ஆச்சரியங்கள் என்ன?

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மார்ச் 9 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று (ஜனவரி 18) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பும்ரா அணியில் இடம் பெற மாட்டார் என்று கருதப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ட்ரெஸ் தொடர்பான காயம் அவருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனினும், அவர் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் குல்தீப் யாதவுக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு பிறகு, அவர் எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், குல்தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார். சுப்மன் கில் துணை கேப்டன். ஜெய்ஸ்வால் முதன்முறையாக ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்தீக் பாண்ட்யா, ரிசப் பண்ட், அக்ஸார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர்,அர்ஷாதீப் சிங், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணியில் இடம் பெற மாட்டார் என்று கருதப்பட்ட ரவீந்தர ஜடேஜாவுக்கு சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே அணிதான் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் விளையாடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share