அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் டேவிட் ஆண்டனை வீழ்த்தி இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் ஆனார்.
இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 24ம் இடத்துக்கு முன்னேறினார்.
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற கடைசி சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் டேவிட் ஆண்டனை எதிர்கொண்டார்.
கடைசி சுற்றுக்கு முன்பு 3 இந்திய வீரர்கள் உள்பட 9 வீரர்கள் 6 புள்ளிகளைப் பெற்றிருந்தார்கள்.
இதனால் கடைசி சுற்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார், அர்ஜுன் எரிகைசி.
இறுதியில், கடைசி சுற்றை வென்ற அர்ஜுன், 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இதன்மூலம் அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் ஆனார். இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன்.
இவருக்கு முன்பு தமிழக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20ம் இடத்திலும் உள்ளார்கள்.
ஜெ.பிரகாஷ்
பிரக்ஞானந்தா அணி ஆபத்தானது: மாக்னஸ் கார்ல்சன் இப்படி சொல்ல காரணம் என்ன?