இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராஜ் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடியுடன் மோதியது.
தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், துடிப்புடன் விளையாடிய இந்திய இணை, மலேசியாவை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.
இதனையடுத்து இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி படைத்துள்ளனர்
கடந்த மாதம் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற இந்த ஜோடி அடுத்த ஒரு மாத்த்திற்குள் மற்றொரு சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆறு அடுக்குகளைக் கொண்ட BWF வேர்ல்ட் டூரின் கடைசி தொடரான உலக டூர் பைனல்ஸுக்கு சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
காஷ்மீரில் நிலநடுக்கம்… விஜய் என்ன செய்தார்?: தயாரிப்பாளர் விளக்கம்!
தந்தையர் தின ஸ்பெஷல் : கருமேகங்கள் கலைகின்றன ஸ்னீக் பீக்!