மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சாதனையுடன் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்த நிலையில் வதோராவில் இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று (டிசம்பர் 22) நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மிக அபாரமாக பேட்டிங் செய்து 91 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, அடுத்தடுத்து விக்கெட் இழந்து 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை பெற்றார்.

211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் சாதனை விவரம்!
இதற்கிடையே 9 ரன்களில் சதத்தை தவறவிட்ட இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் அபார சாதனை படைத்துள்ளனர்.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை மந்தனா படைத்தார். அவர் 2024ஆம் ஆண்டில் மட்டும் 1,602 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் லாரா உல்வார்ட் (2024 ஆம் ஆண்டில்1593 ரன்கள்) இங்கிலாந்து வீராங்கனை நாட் சைவர்-பிரண்ட் (2022 ஆம் ஆண்டில் 1346 ரன்கள்)
2018 ஆம் ஆண்டில் 1291 ரன்களும், 2022 ஆம் ஆண்டில் அவர் 1290 ரன்களும் எடுத்து ஸ்மிருதி மந்தனாவே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
அதே போல் பெண்கள் ஒருநாள் போட்டியில் 1,000 ரன்களை கடந்த 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். முதலிடத்தில் 5,319 ரன்களுடன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனி செல்போன் பேசினால்… அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை!
அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் சாதி குறித்த சட்டப் போராட்டம்! பாகம் 3.
டாப் 10 நியூஸ் : அமித் ஷாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் முதல் கிறிஸ்துமஸ் விழாவில் மோடி வரை!