இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் என்பதில் பிசிசிஐ குழப்பத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கிற்கு பிறகு எந்த ஒரு வீரரும் 4 வது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை விளையாட முடியவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று(ஆகஸ்ட் 10) மும்பையில் நடைபெற்ற ”LALIGA EA” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பேசுகையில், “4-ம் நிலை பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. யுவராஜ் சிங்கிற்கு பின் எந்த வீரரும் 4-ம் நிலை வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
நீண்ட காலத்திற்கு பின் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டார். 20 போட்டிகளில் 805 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் தற்போது வீரர்களின் காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 4 ஆண்டுகளாக இதே நிலமை தான் நீடிக்கிறது. எனவே அந்த இடத்தில் விளையாட புதிய வீரரை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.
நான் கேப்டனாக இல்லாத போது கூட 4-ம் நிலை வீரர்களின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன். நிறைய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் காயமடைகிறார்கள் அல்லது ஃபார்மில் இல்லாமல் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
உலகக்கோப்பைத் தொடரை பொறுத்தவரை நான் உட்பட யாருமே நேரடியாக தேர்வு செய்யப்பட போவதில்லை. இந்திய அணியில் யாருக்கும் நிரந்தர இடமில்லை”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மஞ்சள் நிறப் பேருந்துகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!
திருச்சி என்ஐடி நேரடி பணி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!