கடைசி டி20 போட்டியில் செய்யப்பட்ட மாற்றம்!

விளையாட்டு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25 ) ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா முதலில் பவுலிங் செய்யும் என்று அறிவித்தார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் : 1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) பும்ரா, 10) புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட் வாஷ்’: இந்திய மகளிர் அணி செய்த தரமான சம்பவம்!

கோவை எப்படி இருக்கிறது? பதிலளிக்கும் மாநகர காவல் ஆணையர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *