asian kabaddi championship

ஆசியக் கபடியில் ‘இந்தியா’ ஆதிக்கம்: 8வது முறையாக சாம்பியன்!

விளையாட்டு

ஆசியக் கபடி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி 8 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஆடவருக்கான ஆசியக் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டன.

இந்த தொடரின் லீக் போட்டியில் கொரியா, ஜப்பான், சீன தைபே, ஈரான் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்த ஈரான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

புசானில் உள்ள டோங்-ஈயுய் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சியோக்டாங் கலாச்சார மையத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டது இந்தியா.

போட்டி தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் ஈரான் முன்னிலையில் இருந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா.

போட்டியின் 10 வது நிமிடத்திலேயே ஈரான் அணியின் அனைத்து வீரர்களையும் ரைடு செய்து ஆல் அவுட் செய்தனர்.

இதில், இந்திய அணியின் கேப்டன் பவன் ஷெராவத் மற்றும் அஸ்லாம் இனாம்தார் ஆகியோர் சிறப்பாக ரைடு செய்தனர்.

தொடர்ந்து போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் இந்திய அணியினர் 2ஆவது முறையாக ஈரான் அணியினரை ஆல் அவுட் செய்தனர். இதனால் இந்திய அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

ஆனால் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்ட ஈரான் 29 வது நிமிடத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இந்திய அணி முன்னிலையில் இருந்தது.

கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் இந்தியா 38 – 31 என்ற கணக்கை 42 – 32 என்று ஸ்கோரை உயர்த்தி ஈரானை வீழ்த்தியது இந்தியா.

இதன்மூலம் ஆசியக் கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை 9வது முறையாக கைப்பற்றியுள்ளது இந்தியா.

கடந்த 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடரில் இதுவரை 1980, 1988, 2000, 2001, 2002, 2005, 2017 என 7 முறை இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

அதன் தொடர்ச்சையாக தற்போது மீண்டும் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கபடியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது இந்தியா.

மோனிஷா

“ஆளுநர் கடிதத்தை நிராகரிக்கிறோம்” – தங்கம் தென்னரசு

மெட்ரோவில் ஜாலியாக ரைடு சென்ற பிரதமர்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி அறிவிப்பு!

Asian Kabaddi Championship 2023
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *