shikhar dhawan

தவான் தலைமையில் மேற்கிந்தியா செல்லும் இந்திய அணியினர்!

விளையாட்டு

இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட இந்திய அணியினர்  தவான் தலைமையில் மேற்கிந்தியா செல்கின்றனர்.
இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டி தொடர் டிராவில் முடிந்தது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியா செல்ல உள்ளது. 

ஷிகர் தவான் தலைமையில் மேற்கிந்தியா செல்லும் இந்திய அணியில் ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

மேற்கிந்திய அணி வீரர்கள்… நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ். 

மேற்கிந்திய – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. 

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *