ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளது.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளது.
இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த போட்டிக்கான அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று டெல்லியில் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி, இன்று பகல் 12 மணியளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அயர்லாந்தில் இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டார்.
கூட்டம் நிறைவுபெற்ற நிலையில், சரியாக பகல் 1.30 மணிக்கு ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்),
இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா
காத்திருப்பு வீரர்: சஞ்சு சாம்சன்
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தகுதி பெற்ற நிலையில் வரும் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
”புரட்சிக்கான மரியாதையே போய்டுச்சி”: எடப்பாடி பட்டம் குறித்து டிடிவி
எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை? வானிலை மையம் தகவல்!