பாண்டியா, பண்ட் இல்லை… இவர்தான் புதிய டி20 கேப்டனா?

விளையாட்டு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2024 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதை அடுத்து விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும், அதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

இதை தொடர்ந்து, கோப்பையை வென்ற வெற்றி கொண்டாட்டங்களால், இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொற்றாமல் இருந்தது.

ஆனால், தற்போது புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதனால், புதிய டி20 கேப்டன் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ரோகித் சர்மா இல்லாத பல சமயங்களில், டி20 போட்டிகளில் இந்திய அணியை அவரே வழிநடத்தியுள்ளார்.

அதேபோல, கார் விபத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட், தற்போது சிறப்பாக விளையாடிவரும் நிலையில், அவருக்கும் கேப்டன் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், அனுபவம் மிக்க வீரர் என்ற அடிப்படையில், ஜஸ்பிரிட் பும்ராவும் இந்த ரேஸில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கேப்டனுக்கான ரேஸில், சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் புதிய நிரந்தர டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவே நியமிக்கப்படலாம் என்றும், 2026 டி20 உலகக்கோப்பை வரை அவரே இந்திய அணியின் கேப்டனாக தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை!

தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா: ‘ராயன்’ டிரைலர் எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *