”முட்டை விற்க செல்லுங்கள்…” இந்திய வீரர்களை எச்சரித்த கபில்தேவ்

விளையாட்டு

ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தோல்வியால் இந்திய கிரிக்கெட் அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனிடையே இந்தியாவின் தோல்விக்கு வீரர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை பெற்று தந்தவரான கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், வீரர்களை முட்டை அல்லது வாழைப்பழம் விற்க செல்லுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 16ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரஷர் குறித்து பேசிய கபில்தேவ், வீரர்களின் சிந்தனையில் மாற்றம் தேவை என்பதை தனது அதிரடியான கருத்துகளால் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், ”தற்போது இந்திய அணி வீரர்கள் விளையாட்டை ரசித்து ஆட வேண்டும் என்றும், சர்வதேச போட்டிகளில் வீரர் ஒருவர் அழுத்தம் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் கபில்தேவ் கூறுகையில் “நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம். அதனால் மன அழுத்தம் அதிகம் உண்டாகிறது என்று வீரர்கள் தொடர்ந்து கூறுவதை நான் கேட்கிறேன்.

இந்த வார்த்தை ரொம்ப சர்வசாதாரணமாகி விட்டது. அவர்களை, நான் ’விளையாடாதே’னு சொல்றேன். யாரு உங்களை விளையாடியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்?

indian players should go to sell eggs - kapil dev

பிரஷர் இருக்கு. உண்மைதான். ஆனால் நீங்கள் நன்றாக விளையாடினால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இல்லையென்றால் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள்.

அதைவிட நீங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். 120 கோடி பேர் இருக்கும் நாட்டில், 20 பேர் மட்டுமே விளையாடுகிறீர்கள். இது ஒரு பெருமைக்குரிய விஷயம். நீங்கள் மக்களிடமிருந்து மிகுந்த அன்பைப் பெறுகிறீர்கள்.

இதில் அழுத்தம் என்பதை மறந்து அந்த பெருமையை எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

மேலும் ”கடினமாக உழைக்க விரும்பாதவர்கள்தான் மனஅழுத்தம் குறித்து பேசி வருகின்றனர். அழுத்தம் என்பது ஒரு அமெரிக்க வார்த்தை.

நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், வேண்டாம். யாராவது உங்களை கட்டாயப்படுத்துகிறார்களா? வாழைப்பழம் அல்லது முட்டைகளை விற்கச் செல்லுங்கள்.

இனி அழுத்தம் என்று கூறாமல் அதனை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கபில்தேவ் குறிப்பிட்டார்.

கபில்தேவின் இந்த ஆக்ரோசமான கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஏனெனில் கடந்த ஒருவருட காலமாக கிரிக்கெட்டில் சோபிக்காத விராட்கோலி, ஓய்விற்கு பிறகு தான் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிவகார்த்திகேயனுக்கு எதிராக மனு: நீதிமன்றம் அதிரடி!

”கொரோனா நெறிமுறைகளை பிரதமர் பின்பற்றினாரா?” – காங்கிரஸ் பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *