மனைவியுடன் விவாகரத்தா?: சஹால் விளக்கம்!
தனக்கும், தனஸ்ரீக்கு இடையே விவாகரத்து என சமூகவலை தளங்களில் கருத்து பரவிய நிலையில் அதற்கு கிரிக்கெட் வீரர் சஹால் விளக்கமளித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020ம் ஆண்டு, மருத்துவரும், நடிகையுமான தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் அவ்வப்போது சமூகவலை தளங்களில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர். இவர்களது ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் வைரலாகும்.
பெயரை நீக்கியதால் எழுந்த சர்ச்சை!
இருவரும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நிலையில், தனஸ்ரீ வர்மா தனது பெயரிலிருந்து ‘சாஹல்’ என்ற குடும்பப்பெயரை சமீபத்தில் நீக்கினார்.
இதனால் அவருக்கும், சஹாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் செய்திகள் வெளியானது. சமூகவலை தளங்களில் சாஹல் தனஸ்ரீ விவாகரத்து குறித்த மீம்ஸ் வைரலானது.
சஹால் விளக்கம்!
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஹால், நல்லா போய்க்கிட்டு இருக்குற நம்ம வாழ்க்கைல யாருப்பா இப்படி பன்றது? என்பது போல், விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பும் வெளிச்சமும் கிடைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களுக்கு எதிராக தொடரும் சர்ச்சை!
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பேசியது சர்ச்சையானது.
இதுகுறித்து ரிஷப் பண்டும் கடும் எதிர்வினையாற்றினார். வரும் 27ம் தேதி தொடங்க உள்ள ஆசியக் கோப்பைக்கான போட்டியில் பண்ட் மற்றும் சாஹல் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் சர்ச்சைகளை நீட்டிக்க விடாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தமிழக வீரர் பயிற்சியாளர்!