இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து – பிஃபா!

விளையாட்டு

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை(AIFF) பிஃபா ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் பிஃபா அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக , அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்வதாகவும் , இந்திய கால்பந்து கூட்டமைப்பு பிஃபாவின் சட்டங்களை மீறுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

போட்டிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பிஃபா மதிப்பீடு செய்து வருகிறது.

பிஃபா இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான தொடர்பில் உள்ளது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற இருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிஃபா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *