மன்மோகன் சிங் மறைவு… கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி!

Published On:

| By Selvam

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 26) காலமானார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி, கையில் கருப்பு பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில், 1 – 1 என இரண்டு அணிகளும் சமநிலையில் நீடிக்கின்றன. நான்காவது போட்டியானது மெல்போர்னில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று (டிசம்பர் 27) கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

 இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள், வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்: அழைப்பு விடுத்த திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel