மூன்று ஒரு நாள் போட்டிகள்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி

Published On:

| By Minnambalam

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையில் விளையாட இந்திய அணி, ஜிம்பாப்வே செல்கிறது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது. ஒருநாள் போட்டி (3 ஆட்டங்கள்) தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20  போட்டி (5 ஆட்டங்கள்) தொடரை 4-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
வருகிற 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது.

இரண்டாவது போட்டி 20ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ஆம் தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் ஹராரேவில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய தலைமையில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியினர்… ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அேலஷ்கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாகர்.

-ராஜ்

ட்ரம்ஸ் அடித்த ஸ்டாலின் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share