புதிய பயிற்சி ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ!

விளையாட்டு

அடிடாஸ் லோகோ பொறித்த புதிய பயிற்சி ஜெர்சியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் இடம் பெற்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய ஸ்பான்சரான அடிடாஸ் வடிவமைத்த ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது.

வரும் 2028 மார்ச் மாதம் வரையில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் அண்டர் 19 கிரிக்கெட் அணிகளுக்கு வேண்டிய ஜெர்சி, கிட் மற்றும் இதர மெர்சண்டைஸை அடிடாஸ் வடிவமைத்து மற்றும் தயாரித்து கொடுக்கும் என சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்தது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் அடிடாஸ் சிஇஓ பியான் குல்டன் ஆகியோர் இதை வரவேற்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் அடிடாஸ் லோகோ பொறிக்கப்பட்ட புதிய பயிற்சி ஜெர்சியுடன் உள்ள புகைப்படத்தை பிசிசிஐ இன்று(மே25) தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், டீம் இந்தியா புதிய பயிற்சிக் கருவியை (kit) வெளியிடுகிறது. மேலும் ,உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான எங்கள் தயாரிப்புகளை தொடங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020 நவம்பரில் நைக் நிறுவனத்துடனான 15 ஆண்டு கால கிட் ஸ்பான்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், தொடர்ந்து அதற்கான புதிய டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் (MPL) இணைந்தது. இருப்பினும் முன்கூட்டியே எம்பிஎல் வெளியேற தற்போது அடிடாஸ் அதை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பா? – கொதிக்கும் கே.எஸ்.அழகிரி

ஆசிய கோப்பை: முடிவு எப்போது? ஜெய் ஷா பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *