மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் கடற்கரையில் வாலிபால் விளையாடினர்.
கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோத உள்ளது.
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று கரீபியன் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு இந்திய அணி வீரர்கள் கடற்கரையில் வாலிபால் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் சோகம் தேசாய் கூறும்போது, “இரண்டு நாட்கள் ஒய்வு எடுக்க அனுமதி அளித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு நன்றி. நாளை முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செல்வம்