ஐசிசி ஒருநாள் தரவரிசை: மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!

விளையாட்டு

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலை  ஐசிசி வெளியிட்டுள்ளது.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தர வரிசையில் நான்காம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் இரண்டாவது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது.

செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எதிர்கொள்வதால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் மேலும் சில அணிகளை வரிசைபடுத்தியுள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 119 புள்ளிகளுடன் இரண்டாம், இடத்திலும் இந்தியா அணி  111 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும்,

பாகிஸ்தான் அணி 107 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 101 புள்ளிகளுடன் ஐந்தாம், இடத்திலும் தென்னாப்பிரிக்கா 101 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும்,

பங்களாதேஷ் அணி  92. 8 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும், இலங்கை அணி 92. 9 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 71 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 69 புள்ளிகளுடன் பத்தாம் இடத்திலும் உள்ளது.

-ராஜ்

4 ஆண்டுகளில் 777 கிரிக்கெட் போட்டிகள்: இந்தியாவுக்கு எத்தனை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0