Asian Games 2023: விளையாடாமலே கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா

விளையாட்டு

சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவின் 14வது நாள் போட்டிகளில், இந்தியா 100 பதக்கங்களை கடந்து புதிய வரலாறு படைத்தது.

இந்நிலையில், ஆடவர் கிரிக்கெட் பிரிவின் இறுதிப்போட்டியில், தங்கப் பதக்கத்திற்காக இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.

துவக்கத்திலேயே மழை குறுக்கிட்டதால், இந்த போட்டி சற்று தாமதமாக துவங்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கான் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து திணறியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜுபாய்த் அக்பரி 5 ரன்களுக்கும், முகமது ஷாஷத் 4 ரன்களுக்கும் வெளியேறினர். அடுத்து வந்த நூர் அலி சத்ரான் 1 ரன்னுக்கும், அப்சர் சசாய் 15 ரன்களுக்கும், கரிம ஜன்னத் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

52 – 5 என்ற நிலையில் ஆப்கான் அணி இருந்தபோது, ஜோடி சேர்ந்த சாகிதுல்லா கமல் மற்றும் குல்புதின் நைப், 6 வது விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

ஆனால், 18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் சேர்த்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின் நீண்ட நேரம் ஆகியும், மழை விடாமல் பெய்ததால், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, ஐசிசி தரவரிசை அடிப்படையில் முன்னிலையில் உள்ள இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

3ஆம் இடத்திற்கான போட்டியில், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம், வெண்கல பதக்கத்தை தன்வசமாக்கியது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பானையை திருமணம் செய்ய வற்புறுத்தும் பெற்றோர்… பெண் குமுறல்!

விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு: அக்டோபர் 30-க்கு ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0