ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹன்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா தொடர்ந்து பதக்கங்களையும் சேர்த்து வருகிறது.
குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
5ஆம் நாளான இன்று (செப்டம்பர் 28) ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. 1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
1,733 புள்ளிகளுடன் சீனா வெள்ளிப்பதக்கமும், 1,730 புள்ளிகளுடன் வியட்நாம் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 23 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
மோனிஷா
கனடாவுடன் மோதல்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!