செர்பியாவில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் அனைத்து இந்திய வீராங்கனைகளும் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், ஷெபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எனினும் இந்த தொடர் இந்திய வீராங்கனைகளுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.
நேற்று நடந்த முதல்சுற்று போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளும் தோல்வியை தழுவினர்.
மூன்று முறை காமன்வெல்த் சாம்பியனான வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றுப்போட்டியில் 0-7 என்ற கணக்கில் மங்கோலியாவின் குலான் பட்குயாக்கிடம் தோல்வியடைந்தார்.
இதற்கிடையே அவர் ரிபேசாஜ் பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில், அவர் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு 2வது சுற்றில் நீலம் சிரோஹி 0-10 என்ற கணக்கில் ருமேனியாவின் எமிலியா அலினா வூக்கிடம் 0 -10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ரிபேசாஜ் பிரிவு முதல் சுற்றில் சுஷ்மா தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் ஷெபாலியை, பிரான்ஸ் மல்யுத்த வீராங்கனை கூம்பா லாரோக் வீழ்த்தினார். 76 கிலோ எடைப்பிரிவு முதல்சுற்றில் பிரியங்கா தோல்வியை தழுவினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரசிகர்களுக்கு விராட் கோலி அட்வைஸ்!