இந்தியா Vs மேற்கிந்தியா: இன்று முதல் ஒருநாள் போட்டி!

விளையாட்டு

இந்தியா –  மேற்கிந்திய அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 22) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.  

இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியா சென்றுள்ளது.ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும், டி20  போட்டிக்கு ரோஹித் சர்மாவும் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்கள். 

இந்தியா –  மேற்கிந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (ஜூலை 22) நடக்கிறது. இந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் டி20 தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது 

இன்றைய போட்டியில் தவானுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்று தெரியவில்லை. சுப்மன்கில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில் கில்லுக்கு வாய்ப்பு உள்ளது. தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஜடேஜா ஆகியோர் மிடில் வரிசையில் ஆடுவார்கள். 

வேகப்பந்து வீரர்களில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்தில் யுசுவேந்திர சஹாலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவேஷ்கான், ஷர்துல் தாகூர், அக்‌ஷர் படேல் ஆகியோரில் ஒருவருக்கு இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் டி20  தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்திய அணி மேற்கிந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். மேலும்,   மேற்கிந்திய அணிக்கு எதிராக கடைசியாக ஆடிய ஐந்து ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது. 

ஆனால், மேற்கிந்திய அணி  சமீபத்தில் தனது சொந்த மண்ணில் வங்காள தேசத்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.  இந்த நிலையில் மேற்கிந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹோல்டர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஹாய் ஹோப், புரூக்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அல்ஜாரி ஜோசப், அகில் உசேன் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர். 

இரு அணிகளும் இன்று மோதுவது 137ஆவது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 136 போட்டியில் இந்தியா 67இல், வெஸ்ட் இண்டீஸ் 63இல் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு ஆட்டங்கள் டையில் முடிந்தது. நான்கு ஆட்டங்களுக்கு முடிவு இல்லை.

இந்த நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா  என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *