இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்தது.
பின்னர், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 115.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் அனது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 118 ரன்கள் எடுத்து 15 வது ஓவரில் டிக்ளேர் செய்தவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.
அதில், பிராத்வெய்ட் 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய மெக்கன்சி 4 பந்துகள் மட்டுமே தாக்கு பிடித்து அஸ்வின் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது சந்தர் பால் 98 பந்துகளில் 24 ரன்களும், பிளாக் வுட் 39 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படும் நிலையில், நாளை (ஜூலை 25) நடைபெற உள்ள கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்தியா (I.N.D.I.A) என்ற அரசியல் கூட்டணியும், என்.டி.ஏ (N.D.A) என்ற அரசியல் பிணியும்!